மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

rajnath singh clarifies about speculations surrounding prime minister post

இதனை தெடர்ந்து பாஜக தனி பெரும்பான்மை பெறாவிட்டால் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி ஆகிய இருவரில் யாராவது ஒருவர் பிரதமர் ஆவார்கள் என தகவல் பரவியது. இந்நிலையில் இதுகுறித்த தற்போது கூறியுள்ள ராஜ்நாத் சிங், "இது ஒரு கற்பனையான சூழ்நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பாஜக இந்த முறை தனி பெரும்பான்மை பெறுவது மட்டுமல்ல, மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பாஜக பெரும். அதுபோல மோடிதான் நிச்சயம் அடுத்த முறை பிரதமராவார்" என கூறினார்.