Advertisment

ஒன்பது கோடிக்கு 119 ஆபாச வீடியோக்கள்... போலீசை அதிரவைத்த பிரபல நடிகையுடைய கணவரின் விவகாரம்!

Rajkundra gets bail in private video case

Advertisment

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரைக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாசப் படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜ் குந்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாசப்பட வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்கத்திட்டமிடப்பட்டதும் தெரியவந்தது. தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாசப் படங்களைத்தயாரித்து செயலிகளில் பதிவேற்றம் செய்த புகாரில் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராஜ் குந்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தரப்பினர் தெரிவித்துள்ளனர். அவரது அலுவலகங்களில் இருந்தும் பல ஆபாச சீடிக்கள் கைப்பற்றப்பட்டன.

ராஜ் குந்த்ராவுக்கு எதிரான 1400 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்படி ராஜ் குந்த்ராவின் பார்ட்னரான சவுரா குஷ்வா வாக்குமூலம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜ் குந்த்ரா ஆபாச படங்களுக்காக தான் ஹாட் ஷாட்ஸ் செயலியை உருவாக்கினார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் மொபைல், ஹார்டிஸ்க், லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும் அதனை ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜாமீன் கோரி ராஜ் குந்த்ரா தாக்க செய்துள்ள மனுக்களை மும்பை நீதிமன்றம் தள்ளூபடி செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மீண்டும் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது ராஜ் குந்த்ராவுக்கு ஐம்பது ஆயிரம் பிணைத்தொகையுடன் ஜாமீன் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

இரண்டு மாதங்களுக்கு பிறகு ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். அந்த வாக்குமூலத்தில், ‘தான் வேலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் தனது கணவர் ஆபாச படம் எடுத்து வந்தது தனக்கு தெரியாது. மேலும் ஹாட் ஷாட்ஸ் மற்றும் பாலிஃபேம் உள்ளிட்ட செயலிகள் குறித்தும் தனக்கு தெரியாது’ என தெரிவித்துள்ளார். தனது கணவர் ஆபாச படம் தயாரித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை பிரியும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியானது. அதே போல் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷில்பா ஷெட்டி தனது கணவரை பிரிய உள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Mumbai bail rajkundra shilpa shetty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe