இந்தியத் தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் லவாசா கடந்த 2018 ஜனவரி 23-ஆம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிவடைய உள்ள நிலையில், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிலிப்பைன்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ஏ.டி.பி.) துணைத் தலைவராக அசோக் லவாசா அண்மையில் தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜார்க்கண்ட் கேடர்- 1984 பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரியான ராஜிவ் குமாரைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.