rr

Advertisment

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சலேம் தாப்ரி பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உள்ளது அந்த சிலையின் மீது சிலர் தார் ஊற்றி அவமதித்துள்ளனர். மேலும் 1984-ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை ராஜீவ் காந்தி தூண்டிவிட்டதாகவும் கூறி கோஷமிட்டுள்ளனர். இந்தக் காட்சியை செல்போனிலும் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது. இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி ராஜீவ் சிலையை அவமதித்த அகாலிதளம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் குர்திப் சிங் கோஷா என்பவரைக் கைது செய்துள்ளனர்.