Advertisment

யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த்

Rajinikanth met Yogi Adityanath

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ரசிகர்கள் தாண்டி அரசியல் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஆகியோர் பார்த்து ரசித்தனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இப்படத்தை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இமயமலைபயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, தற்போது உத்தரப் பிரதேச தலைநகரான லக்னோவில் இருக்கும் நிலையில், அம்மாநில முதலமைச்சருடன் படம் பார்ப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ஜெயிலர் படத்தை பார்த்துள்ளார். அதேநேரம் இன்று மாலை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்தனர். அப்போது பல்வேறு பரிசுப்பொருட்களை யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்.

uttarpradesh rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe