மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்த தமிழர் பிரகாஷ். மாற்றுத்திறனாளியான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 18 மாநிலங்களில் ரத்த தானம் செய்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரத்த தானம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் பிரகாஷ். அப்போது ரஜினிகாந்த் ரத்ததானத்தில் உலக சாதனை புரிந்த பிரகாஷை பாராட்டினார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });