RAJIB BANERJEE

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த முகுல் ராய்.கடந்த 2017ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பிறகு அவர் பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும்நியமிக்கப்பட்டிருந்த அவர்நேற்று (11.06.2021) தனது மகனோடு பாஜகவில் இருந்து விலகி மம்தா பானர்ஜி தலைமையில்திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

Advertisment

இந்தநிலையில்இந்த வருட தொடக்கத்தில்,திரிணாமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்ராஜீப் பானர்ஜி இன்று திடீரென ராஜீப் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸின் மாநில செயலாளரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரும் விரைவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

ராஜீப் பானர்ஜி, அமித்ஷா அழைப்பின்பேரில் டெல்லி சென்று அங்கு அவரை சந்தித்து பேசிய பிறகு பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.