ADVERTISEMENT

இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள இளைஞர்...

10:12 AM Nov 22, 2019 | kirubahar@nakk…

21 வயது இளைஞர் ஒருவர் ராஜஸ்தான் நீதிமன்றம் ஒன்றின் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயதான மயங்க் பிரதாப் சிங், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்துள்ளார். பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வை எதிர்கொண்ட அவர், அதில் வெற்றிபெற்றுள்ளார். இதனையடுத்து 21 வயதிலேயே நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர் என்ற பெயரை எடுத்துள்ள அவர், விரைவில் நீதிபதியை பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது. நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்த நிலையில், ராஜஸ்தான் அரசாங்கம் இந்த ஆண்டு தான் வயது வரம்பை 21 வயது என குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT