zdfgv

Advertisment

மதுபான கடைகளை இரவு சரியாக 8 மணிக்கு மூட வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் உத்தரவிட்டுள்ளார். அப்படி 8 மணிக்கு மூடப்படாமல் செயல்படும் கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றபோது இதே உத்தரவை வெளியிட்டார். அந்த அறிவிப்பு அப்பொழுது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே தற்போதும் அதனை பின்பற்றி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதேபோல தமிழகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் ஒரு மணிநேரமும், ஜெயலலிதா இரண்டு மணிநேரமும் டாஸ்மாக்கின் பணி நேரத்தை குறைத்தார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.