yghjtd

Advertisment

ராஜஸ்தான் மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான அசோக் சந்த்னா, பூண்டி பகுதி நெடுஞ்சாலையில் காரில் பயணம் மேற்கொண்டபோது, அங்கு சுங்கச்சாவடியில் இருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து உடனே அந்த அதிகாரியை அந்த இடத்திற்கு அழைத்த அமைச்சர், அவரை கடுமையாக கண்டித்தார். மேலும் லஞ்சம் வாங்குவதை இனியும் தொடர்ந்தால், வேலை இழக்க நேரிடும் என்றும், அப்படி வேலையை இழந்தால் மீண்டும் இதே டோல் பிளாசாவிற்கு வேலை தேடி வரவேண்டியதுதான் எனவும் அவர் எச்சரித்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து, பலரும் அந்த அமைச்சரின் செயலை பாராட்டி வருகின்றனர்.