நடைபாதை ஒன்றில் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருக்கும் போதே அந்த நடைபாதை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனுமிடத்தில் உள்ள பாதாளச் சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த நடைப்பாதையில் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பாதை சரிந்து விழுந்தது. அப்போது அதில் நடந்து சென்றுகொண்டிருந்தனர் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொருவரும் இதில் காயமடைந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நடைபாதை இடிந்துவிழும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.