ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே. லான் என்ற அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இக்குழந்தைகள் நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யமத்திய அரசின் சிறப்பு குழு கோட்டாவில் உள்ள ஜே.கே. லான் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளது.பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தசம்பவம் அம்மாநில மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.