rajasthan chief minister ashok kelat  talks about ujjwala scheme

Advertisment

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஏழை மக்களுக்குமானிய விலையில் கேஸ்சிலிண்டர் வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான பொதுக்கூட்டம் ஆல்வாரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் புதிய அறிவிப்புஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உஜ்வாலா திட்டத்தில் ஏழைகளுக்கு பிரதமர் மோடி இலவச சமையல் காஸ் இணைப்புகளை வழங்கி வருகிறார். இருப்பினும், கேஸ்விலை உயர்ந்துவிட்டதால்ஏழைகள்சிலிண்டர்களை நிரப்பாமல் காலியாக வைத்துள்ளனர். எனவே, ராஜஸ்தானில் உஜ்வாலாதிட்டப் பயனாளிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஒரு சிலிண்டர் 500ரூபாய்க்கு என ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை வழங்க உள்ளோம். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும்" என்று தெரிவித்து உள்ளார்.