ADVERTISEMENT

12 மணி நேர ஊரடங்கை அறிவித்த மாநிலம்!

10:23 AM Apr 15, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை, முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையைத் தடுக்க, நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று (14.04.2021) பிரதமர் மோடி, கரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. மஹாராஷ்ட்ராவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கரோனா அதிகரித்து வருவதால் ராஜஸ்தான் மாநிலம் 12 மணி நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. மாலை 6 மணியிலிருந்து, காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்குமென ராஜஸ்தான் அறிவித்துள்ளது. இந்த 12 மணிநேர ஊரடங்கு நாளை முதல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்குமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களை மூடவும், பொதுநிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் ராஜஸ்தான் மாநிலம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தானில் நேற்று ஒரேநாளில் 6,200 பேருக்கு கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT