நேற்று (1.07.2019) மாற்று சபாநாயகராக நீலகிரி நாடாளுமன்றத்தொகுதி உறுப்பினர் ஆ.ராசா செயல்பட்டார்.
மூன்று முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் மாற்று சபாநாயகர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அதனடிப்படையில்தான் ஆ.ராசா மக்களவை நடத்தினார்.
அவர் சபாநாயகராக செயல்பட்டபோது, கேரளாவின் மாவேலிக்கரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் (காங்கிரஸ்) சுரேஷ் கொடிகுனில் அவர் தொகுதி பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராசா அவரை சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள், அமைச்சர் அதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனக்கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து பேசினார். இவரும் சீக்கிரம் முடித்துக்கொள்ளுங்கள் எனக்கூறினார். பின்னர் அமைச்சர் அதுகுறித்து பதிலளித்தார்.