Advertisment

மீண்டும் உயரப்போகும் ரயில் கட்டணம்... மத்திய அரசின் புதிய திட்டம்...

railway plans to increase ticket price

Advertisment

ரயில்நிலையங்களில் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 - 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் உயர்த்தப்படாமல் இருந்த ரயில் கட்டணம் கடந்த ஜனவரி மாதம் கிமீ-க்கு நான்குகாசுகள் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ரயில் கட்டணங்கள் உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடு முழுவதும் சில ரயில் நிலையங்கள் மேம்படுத்த வேண்டியுள்ளதால் பயணிகள் ரயில் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தையும் குறைந்த அளவில் உயர்த்தலாம் என முடிவெடுத்துள்ளோம். இதற்கான வழிமுறைகளை ஆலோசித்து வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாககட்டணங்கள் உயர்த்தப்படலாம். இதுதொடர்பாக விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Indian Railway
இதையும் படியுங்கள்
Subscribe