/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69_62.jpg)
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ரயில்வே துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்த கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்கா விஜய் வசந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பேரிடருக்கு முன்பு இருந்தது போல் மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோருக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கிட வேண்டுமென பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன். கொரோனா பேரிடரை காரணம் காட்டி மத்திய அரசு ரயில் பயண கட்டணத்தில் வழங்கி வந்த சேவையை வாபஸ் பெற்றது. ஆனால் கொரோனா முடிந்து இயல்பு நிலைமைக்குத் திரும்பிய பின்னரும் மத்திய அரசு இந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க முன் வரவில்லை. இதன் காரணமாக பல தரப்பட்ட மக்களுக்கு அதிக பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதர மக்களுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகை நிறுத்தி வைத்த காரணத்தால் இத்தரப்பு மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதியோர், மாணவர்கள் மற்றும் பல சேவைகள் புரியும் மக்களின் துயரை போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இத்தகைய சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக மேல் குறிப்பிட்ட மக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பினை அரசு ஈடு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)