Rahul's charge against Modi

பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Advertisment

ரபேல் போர் விமான கொள்முதல் பேரத்தில் ஊழல் நடத்தியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்து வருகிறார்.

Advertisment

இந்தநிலையில் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,

''இந்திய ராணுவத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர். இந்தியாவின் ஆன்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் இழைத்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.