Advertisment

காயம் அடைந்த பத்திரிகையாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ராகுல்! காலணிகளை சேகரித்துக்கொடுத்த பிரியங்கா!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். ராகுல் சகோதரி பிரியங்காகாந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களூம் இந்த வாகனத்தில் சென்றனர்.

Advertisment

k

செய்தி சேகரிப்பதற்காக பத்திரிகையாளர்கள் மற்றொரு திறந்த வாகனத்தில் சென்றனர். அந்த வாகனம் பத்திரிகையாளர்களால் நிரம்பி வழிந்தது. அந்த வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி திடீரென உடைந்ததில் 5 பத்திரிகையாளர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

Advertisment

k

காயம் அடைந்த பத்திரிகையாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ராகுல்காந்தியும், பிரியங்காகாந்தியுவம் உதவினார்கள்.

k

மயங்கி விழுந்த ஒரு பத்திரிகையாளரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க ராகுல்காந்தி உதவினார். அப்போது கூட்டத்தில் சிதறிய அந்த பத்திரிகையாளரின் காலணிகளை பிரியங்கா சேகரித்துக் கொடுத்தது கூட்டத்தினரை நெகிழவைத்தது.

k

k

help injured wayanadu journalists priyanka gandhi vadra rahulgandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe