ராகுல் காந்தி தமிழகம் வருகை...

rahul

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் கூட்டணிகளை முடிவு செய்துள்ளன. அந்த வகையில் திமுக வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 11.30 மணி அளவில் சென்னைக்கு வருகிறார் ராகுல் காந்தி. சென்னையில் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி விழாவில் பங்கேற்கும் அவர் அதன் பின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

congress loksabha election2019 Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe