மக்களவையில் நேற்று நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம் பற்றி ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சும் அதன் பின்னர் அவர் பிரதமர் மோடியை கட்டியணைத்ததும் பெரும் ஏற்படுத்தின. ஒரு பக்கம் பாராட்டுகளும் இன்னொரு பக்கம் விமர்சனங்களும் குவிந்தன. இந்த இரண்டுக்கும் பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார்.
"நேற்று நடந்த விவாதத்தின் மையக்கருத்து என்ன என்றால்
ஒரு சிலருக்கு இருக்கும் வெறுப்பு, பயம், கோபம் ஆகியவற்றை பிரதமர் மோடி பயன்படுத்திக்கொண்டு, அவருக்கான கனவு சாம்ராஜ்யத்தை உருவாக்க நினைக்கிறார்.
நாங்கள் இந்தியர்களின் இதயத்தில் இருக்கும் அன்பும்,அமைதியும் தான் சிறந்த தேசத்தை கட்டமைக்க உதவும் என்பதை நிரூபிக்க போகிறோம்"