நீரவ் மோடி வாழ்க, அனில் அம்பானி வாழ்க என கூறுங்கள்- ராகுல் காந்தி..!

rah

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்துவரும் ராகுல் காந்தி அல்வார் நகரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல், பெருமுதலாளிகளுக்கு உதவும் மோடி இனி "பாரத மாதா வாழ்க" என கூற வேண்டாம், அதற்கு பதிலாக "நீரவ் மோடி வாழ்க, அனில் அம்பானி வாழ்க" என்றுதான்கூற வேண்டும் எனராகுல் காந்தி சாடினார். மேலும் பேசிய அவர், பெருமுதலாளிகள் முதலீடு செய்து மோடியைபிரதமர் ஆக்கினர், எனவே தற்பொழுது அந்த பணக்காரர்களுக்காக அவர்உழைத்துக்கொண்டிருக்கிறார் என கூறினார்.

Narendra Modi Rahul gandhi Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe