Advertisment

வெறும் வெற்று பேச்சுக்களை மட்டுமே வைத்து மோடி தற்பொழுது காலத்தை ஓட்டி வருகிறார்- ராகுல் காந்தி

rah

டெல்லியில் நடைபெற்று வரும் மாபெரும் விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசி வருகிறார். இதில் பேசிய அவர், பெரு முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மத்திய அரசால் கண்டிப்பாக விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியும். அதற்காக காங்கிரஸ் கட்சியும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் என கூறினார். மேலும் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிப்பதாக கூறிய மோடி இன்று வரை அதையும் செய்யவில்லை. வெறும் வெற்று பேச்சுக்களைமட்டுமே வைத்து மோடி தற்பொழுது காலத்தை ஓட்டுவதாக ராகுல் கூறினார். இதில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

Farmers Protest Aravind Kejriwal Delhi protest Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe