ADVERTISEMENT

ராகுல் போட்டியிடுவது கன்னியாகுமரியா..? கர்நாடகாவா..? புதிய பரபரப்பை கிளப்பும் காங்கிரஸ் தலைவர்...

05:29 PM Mar 15, 2019 | kirubahar@nakk…

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து தமிழகத்தில் திமுக உடன் கூட்டணி கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்கிறது. இன்று மதியம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென் இந்தியாவின் ஒரு தொகுதியிலிருந்து தென் இந்திய மக்களின் சார்பாக மக்களவைக்கு செல்ல வேண்டும் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ட்விட்டரில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதுவும் கர்நாடகத்திலிருந்து அவர் மக்களவைக்கு செல்ல வேண்டும் என விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டாலும், ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம் எனும் விதிப்படி அவர் இன்னொரு தொகுதியையும் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் அவர் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என தினேஷ் ராவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ராகுல் காந்தி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடலாம் என்ற செய்திபரவியதும் குறிப்பிடத்தக்கது. மாநில காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் விருப்பப்பட்டாலும் காங்கிரஸ் தலைமையிலிருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT