இந்திய முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங்கின் பிறந்தநாளான இன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:

மன்மோஹன் சிங் தன்னலம் அற்று சேவை செய்பவர், நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் எப்போதும் நலமுடன், மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

Advertisment

இவரை அடுத்து, இந்திய பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புள்ள மன்மோஹன் சிங்கிற்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்தனை செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment