நாளை மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதில் தெலுங்கு தேசம், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்துகொள்கின்றன. பாஜக எதிர்ப்பு கூட்டணியாக உருவாகியுள்ள இந்த கூட்டணியின் முதல் பேரணி நாளை நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானெர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேற்குவங்க முதல்வர் மம்தாவின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பல லட்சக்கணக்கான இந்திய மக்கள் மோடியின் மத்திய அரசுக்கு எதிராக நாளை திரளுகின்றனர் என்றும், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அழிக்க நினைக்கும் மோடிக்கு நாம் பாடம் புகட்டுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம்...
Advertisment