படிதார் இன மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில், ராகுல் காந்தி எனக்கு பிடித்தவர், ஆனால் அவர் என் அரசியல் குரு அல்ல. மேலும் பிரியங்கா காந்தியின்அரசியல் வருகையை விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன் எனக்கூறியுள்ளார்.

Advertisment

hardik patel

குஜராத்தில் படிதார் இனமக்களுக்கான வளர்ச்சிக்காகவும், உரிமைகளைப்பெற்றுத் தருவதற்காகவும்உருவாக்கப்பட்ட ''படிதார் அநாமத் ஆண்ட்லோன் சம்மிட்டி''(PAAS) தலைவர் ஹர்திக் படேல். சிறுவயதிலேயே படிதார் இனமக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இவர், அந்த மக்களின் வளர்ச்சிக்காக காங்கிரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.

Advertisment

அப்படியிருக்க,நேற்று அவர் கொடுத்த பேட்டியில் 'எனக்கு ராகுல் காந்தியை பிடிக்கும். ஆனால் அவர் என் அரசியல் குரு இல்லை. பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையை எதிர்பார்க்கிறேன்' எனக்கூறியுள்ளார். மேலும் 2019 லோக் சபா தேர்தலில் குஜராத்தில் மோடியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என எழுப்பிய கேள்விக்கு, எனக்கு அதற்கான வயது வரம்பு(25) வரவில்லை இல்லையெனில் கண்டிப்பாக எதிர்த்துபோட்டியிடுவேன் என பதிலளித்துள்ளார்.