modi

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்லா பகுதிக்கு விமான சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த கடிதத்தில், கோட்லா பகுதியில் பல பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஒரு லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து தங்கி இந்த மையங்களில் பயிற்சி பெறுகின்றனர். போதுமான விமானங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் அல்லது புதிய விமான நிலையம் அமைத்து கூடுதலாக விமானங்களை இயக்க வேண்டும். இதனால் அந்த பகுதி மக்களும் வளர்ச்சி அடைவார்கள் என்று ராகுல் காந்தி எழுதியுள்ளார்.