மன்மோகன் சிங் போன்ற ஒருவர் தற்போது பிரதமராக இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 88 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா ஆழமாக உணர்கிறது. அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் , ஒரு அழகான வருடம் காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.