செயற்கைக்கோள்களை தடுத்து அழிக்கும் ஏ-சாட் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் அறிவித்தார்.
இதற்காக DRDO அமைப்புக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல், பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார். ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “வெல்டன் DRDO, உங்களது செயல்பாட்டால் அதீத பெருமையாக உள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு எனது நாடக தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது பலராலும் ரீடிவீட் செய்யப்பட்டு வருகிறது.