Rahul Gandhi who whipped himself; bharath judo yatra

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களைக் கடந்து தெலங்கானாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Advertisment

57 ஆவது நாளான இன்றைய ஒற்றுமைபயணம் தெலங்கானா மாநிலம், சங்காராரெட்டி மாவட்டத்தில் பட்டஞ்சேறு பகுதியில் இருந்து தொடங்கப்பட்டது. இந்நிலையில் அங்கு கொண்டாடப்படும் பொனாலு பண்டிகையில் கலந்து கொண்டார். பண்டிகையில் பழங்குடியினரால் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய நடனத்தை ராகுல்காந்தி கண்டு ரசித்தார். இதன் பின் தானும் அந்த நடனத்தில் கலந்து கொண்டார்.

Advertisment

இதன் பின்பு அங்கு தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டுநடனம் ஆடியவர் வைத்திருந்த சாட்டையினை வாங்கி தானும் அடித்துக்கொண்டார். இது குறித்தான புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.