கேரளாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று காலை கொச்சி வந்தடைந்தார். பின்னர், மோடியும் பினராயி விஜயனும் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். அதில் முதல் கட்ட நிதியாக கேரளாவுக்கு 500 கோடி வழங்குவதாக அறிவித்தார் மோடி.
மேலும், பிரதமர் நிவாரணநிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் நிதி அறிவித்துள்ளார்.
இதனை அறிவித்த பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்.
இந்நிலயில், ராகுல் காந்தி கேரளா கனமழை பாதிப்புகளை தேசிய பேரிடராக எந்த ஒரு தாமதமும் இன்றி அறிவியுங்கள் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
"அன்புள்ள பிஎம்,
எந்த ஒரு தாமதமும் இன்றி கேரளா வெள்ளசேதத்தை தேசிய பேரிடராக அறிவியுங்கள். லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை , அவர்களின் எதிர்காலம் விளிம்பில் இருக்கிறது."
Follow Us