Advertisment

யாரும் மனமுடைய வேண்டாம்- ராகுல் காந்தி உணர்ச்சிகரம்...

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக பெரும்பான்மை பெற்று மிண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று பாஜக சார்பில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து அளிக்கப்பட்டது.

Advertisment

rahul gandhi tweet about vote counting

அனைத்து நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் உஷாராகவும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்பு பிரசாரத்தினால் மனம் உடையாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடினமான உழைப்பு வீண் போகாது" என தெரிவித்துள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் ராகுலின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

congress loksabha election2019 Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe