"அவர்களுக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்" - ராகுல் காந்தி வேண்டுகோள்...

rahul gandhi tweet about neet and jee

நீட் மற்றும் ஜே.இ.இ விவகாரத்தில் மாணவர்களுக்காக மக்கள் குரலெழுப்ப வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா பரபரப்புகளுக்கு மத்தியில், வரும் செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வையும், ஜே.இ.இ தேர்வையும் நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துவரும் சூழலில், தேர்வு நடத்தும் முடிவைக் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில், இந்தத்தேர்வுகளுக்கு எதிராகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக உங்கள் குரலை ஒருமுகப்படுத்துங்கள். மாணவர்களின் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுங்கள். மாணவர்கள் மீது அரசு கவனத்தைத் திருப்ப வைப்போம். கவலையடைந்துள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

neet Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe