"இதுவும் கடவுளின் செயல் என விட்டுவிடப் போகிறீர்களா..?" - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி...

rahul gandhi tweet about china border issue

இந்திய எல்லையைச் சீனா ஆக்கிரமிப்பதையும் கடவுளின் செயல் என விட்டுவிடப் போகிறீர்களா என மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா தடுப்பு, பொருளாதார சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. அந்தவகையில் இந்தியா, சீனா எல்லைப்பிரச்சனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, "சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பப்பெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறதுஅல்லது இதுவும் கடவுளின் செயல் என விட்டுவிடப் போகிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

china Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe