மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

rahul gandhi speech at wayanad

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பொது கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், " நான் இந்தியாவின் பிரதமரைப் போல் இங்கு வந்து மேடையேறி பொய்களை பேச மாட்டேன். ஏனென்றால் நான் உங்களுடைய எண்ணம், சிந்தனை, மற்றும் புரிதலை மதிக்கிறேன். இந்த இரண்டு மாதங்கள் மட்டும் நான் உங்களுடன் இணைந்திருக்க விரும்பவில்லை, நமது உறவு நீண்ட காலம் தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன். நான் எனது வாக்குறுதிகளை கூறி உங்கள் மத்தியில் பேச வரவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதை உங்களிடமிருந்து அறியவே இங்கு வந்துள்ளேன்" என கூறினார்.