ராகுல் காந்தி கூறிய "ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், டெல்லியில் "பாரதத்தை காப்பாற்றுவோம்" என்ற கோஷத்துடன் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை காங்கிரஸ் கட்சி நடத்தியது.

Advertisment

rahul gandhi speech in bachao barath meeting

இதில் பேசிய ராகுல் காந்தி, "நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பாஜக வலியுறுத்தியது. சரியான ஒரு விஷயத்தை பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தப்பட்டேன். உண்மையை கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. இன்று, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4% ஆக உள்ளது, அதுவும் அவர்கள் (பாஜக) மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளவிடுவதற்கான வழிமுறையை மாற்றியமைத்ததால் தான். அப்படி இல்லாமல் பழைய முறையில் கணக்கிடப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிடப்பட்டால், அது வெறும் 2.5% மட்டுமே" என தெரிவித்தார்.