ADVERTISEMENT

விவசாய முன்னேற்றத்திற்கான ராகுல் காந்தியின் திட்டங்கள்- உத்தரபிரதேச பிரச்சாரத்தில் அறிவிப்பு...

02:40 PM Apr 15, 2019 | kirubahar@nakk…

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உத்தரபிரதேச விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி உழைக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், "நாங்கள் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் ஆகிய இடங்களில் விவசாயிகளுக்கு கடுமையாக உழைத்து வருகிறோம். உத்திரப்பிரதேசத்திலும் ஒரு நாள் இதே போல காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக உழைக்கும்.

தற்போது காங்கிரஸ் ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் பிரிவு அமைக்கப்பட உள்ளது. அங்கு உருளைக்கிழங்கு அதிகம் வளரும் பகுதிகளுக்கு அருகில் சிப்ஸ் போன்ற உருளைக்கிழங்கை மூல பொருளாக கொண்ட தொழிற்சாலை, தக்காளி அதிகம் வளரும் பகுதிகளில் தக்காளி கெட்ச்அப் தொழிற்சாலை ஆகியவை அமைந்துள்ளது.

இந்த 3 மாநிலங்களிலும் உணவு பதப்படுத்தும் தொழில்களை நாங்கள் ஊக்கப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திகளை நேரடியாக தொழிற்சாலைகளில் விற்பனை செய்வார்கள்" விரைவில் இதுபோல நாடு முழுவதும் அமைக்கப்படும்" என அவர் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT