Advertisment

"பிரதமரே அந்த பிங்க் நிற கண்ணாடியை கழற்றுங்கள்" -  ராகுல் காந்தி!

rahul gandhi

இந்தியாவில் கரோனாபரவல் மோசமடைந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தினசரி இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாபாதிப்பால்இறந்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது கரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதற்கு, மோடி தலைமையிலான அரசேகாரணம் என காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Advertisment

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், தற்போதைய சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான திட்டத்தைமத்திய அரசு மேற்கொண்டுவருவதை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில்ராகுல் காந்தி, கங்கையில் சடலங்கள் மிதந்தயைசுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், ஆற்றில் எண்ணற்ற சடலங்கள் மிதக்கின்றன. மருத்துவமனைகள் நீண்ட தூரத்துக்கு மக்கள் நிற்கிறார்கள். உயிர் பாதுகாப்புக்கான உரிமை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. பிரதமரே, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைதவிர வேறு எதையும் நீங்கள் பார்க்கமுடியாதபடிசெய்யும் அந்த பிங்க் நிற கண்ணாடிகளைகழற்றுங்கள்" என கூறியுள்ளார்.

central vista Narendra Modi Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe