Advertisment

'எந்த குடும்பத்தாலும் இதை உணவு, மருந்திற்காக செலவிட முடியாது' - அரசின் அறிவிப்பை விமர்சித்த ராகுல் காந்தி!

rahul gandhi

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் நேற்று (28.06.2021), மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார நிவாரண திட்டங்களைஅறிவித்தார்.

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்டதுறைகளுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி அளவிலான கடன் உத்தரவாதம், இந்தியாவுக்குவரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணத்தில் இருந்து விலக்கு, ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டம் நவம்பர் மாதம்வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

Advertisment

இந்தநிலையில் நிதியமைச்சரின் அறிவிப்பைராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த ஒரு குடும்பத்தாலும் நிதியமைச்சரின் பொருளாதார தொகுப்பை, தங்கள் (அன்றாட) வாழ்க்கையிலோ, உணவிற்காகவோ, மருந்திற்கவோ, குழந்தைகளின்பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காகவோ பயன்படுத்த முடியாது. இது தொகுப்பு அல்ல,இன்னொரு புரளி" என தெரிவித்துள்ளார்.

Indian economic Nirmala Sitharaman Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe