Advertisment

பீகார் விவசாயிகள் போல மாற்ற விரும்பும் மத்திய அரசு - ராகுல் காந்தி விமர்சனம்!

rahul gandhi

Advertisment

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகநடக்கும்விவசாயிகளின் போராட்டம், 16 வதுநாளாகதொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால், விவசாயிகள் போராட்டத்தைதீவிரப்படுத்தவுள்ளனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு நடத்திய, விவசாயிகளின் வருமானம்பற்றிய ஆய்வின் புள்ளிவிவரங்களைப் பதிவிட்டுமத்திய அரசை விமர்சித்துள்ளார். அந்தப் புள்ளிவிவரங்களின் படி, இந்திய விவசாயிகள், ஆண்டுக்கு சராசரியாக 77 ஆயிரத்து 124 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள். பஞ்சாப் மாநில விவசாயிகள் சராசரியாக, நாட்டிலேயே அதிகபட்சமாக 2 லட்சத்து 16 ஆயிரத்து 716 ரூபாய் ஆண்டு வருமானமும், பீகார் மாநில விவசாயிகள், மிகவும் குறைவாகஆண்டுக்கு, சராசரியாக42 ஆயிரத்து684 ரூபாய் வருமானமும்ஈட்டுகிறார்கள்.

இப்புள்ளி விவரத்தை,தனதுட்விட்டர் பக்கத்தில்பதிவிட்டராகுல் காந்தி, நமதுநாட்டில், பஞ்சாப் விவசாயிகள்தான் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள். பீகார் விவசாயிகளின் வருமானம், தேசிய சராசரியை விடக் குறைவாக உள்ளது. விவசாயிகள், தங்கள் வருமானம் பஞ்சாப்மாநிலவிவசாயிகளின் வருவாயைப்போலவேஅதிகமாக இருக்கவேண்டும்என்றே விரும்புவார்கள். ஆனால், மத்திய அரசு, அனைத்துவிவசாயிகளின் வருமானமும் பீகார் மாநில விவசாயிகளின் வருமானம் போன்றேஇருக்கவேண்டும்எனவிரும்புகிறது" எனமத்திய அரசை விமர்சித்துள்ளார்.

farmer protest. Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe