Rahul Gandhi showered love towards the struglerers

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம்கடந்த 14ஆம் தேதி முதல் மணிப்பூரில் இருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார் அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தும் பாத யாத்திரை பயணத்தில் மக்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அசாம் மாநில அரசு மிரட்டுகிறது. ஆனால், மக்கள் மாநில அரசின் அச்சுறுத்தலையும் மீறி இந்த ஒற்றுமைப் பயணத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது காங்கிரஸ் கட்சி நடத்தும் பயணம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வெளிப்பாடு என்பதை உணர மாநில அரசு தவறி விட்டது. நாட்டிலேயே அதிக அளவில் லஞ்சம் மற்றும் ஊழலில் திளைப்பவர் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தான். எனவே வரும் தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்” எனப் பேசினார்.

Advertisment

இதற்கு முன்னதாக தனது யாத்திரைக்கு எதிராக சாலையோரம் ஒன்றாக கூடி முழக்கங்களை எழுப்பியவர்களை நோக்கி தனது பாணியில் பிளையிங் கிஸ் கொடுத்து ராகுல் காந்தி தனது அன்பைப் பொழிந்தார். இது தொடர்பான வீடியோவையும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.