Advertisment

ராகுலுக்கு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு 

Rahul gandhi sentenced to jail and promoted to judge

Advertisment

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறுவழக்கில் இரண்டு ஆண்டுகள்சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த தண்டனையை எதிர்த்து கடந்த 3 ஆம் தேதி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராகுல், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூரத் நீதிபதி ஹெச்.எஸ். வர்மாவுக்குராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைவழங்கி தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

congres Gujarat
இதையும் படியுங்கள்
Subscribe