Advertisment

“என்னால் என்ன வேண்டுமானாலும் பிரதமரை சொல்ல வைக்க முடியும்” - ராகுல் காந்தி

Rahul Gandhi says he can make the Prime Minister say whatever he want

Advertisment

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று (17-05-24) காங்கிரஸ் சார்பில் ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

அதில் பேசிய ராகுல் காந்தி, “என்னால் என்ன வேண்டுமானாலும் பிரதமரை சொல்ல வைக்க முடியும். நரேந்திர மோடி, நீங்கள் அதானி, அம்பானி பெயர்களை ஒருபோதும் எடுக்க மாட்டீர்கள் என்று நான் சொன்னேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு, நரேந்திர மோடி அதானி-அம்பானி என்றார். அவர் என்ன சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதை என்னிடம் சொல்லுங்கள். நான் அப்படியே செய்கிறேன். இரண்டு நிமிடம் ஆகும். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க வேண்டும். ஆனால், நரேந்திர மோடி 22 பில்லியனர்களை உருவாக்கினார்” எனப் பேசினார்.

modi Raebareli
இதையும் படியுங்கள்
Subscribe