Skip to main content

“மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான போர்” - ராகுல் காந்தி

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Rahul Gandhi says Battle between Mahatma Gandhi and Godse

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

அதில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதனை எதிர்கொண்டு இழந்த ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் தீவிரமாக இயங்கி வருகிறது. 

 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ஷாஜாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று இன்று (30-09-23) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “வருகிற நாடாளுமன்றத் தேர்தல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர் ஆகும். இந்த போரில், ஒரு பக்கம் காங்கிரஸும் மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒருபுறம் மகாத்மா காந்தி, மற்றொரு பக்கம் கோட்சே. அதுபோல் இந்த போர் என்பது வெறுப்புக்கும், அன்பு மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். 

 

அவர்கள் எங்கு சென்றாலும், வெறுப்பை பரப்புகிறார்கள். இப்போது மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களிடம் அவர்கள் வெறுப்பைக் காட்டியதால் அதனையே அவர்கள் திரும்பப் பெறுகிறார்கள்” என்று கூறினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

 Counting of votes for four state assembly elections has begun

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

 

தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு தேவாலயங்களில் வழிபாடு நடக்கும் என்பதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிக்கைகள் எழுந்தது. அதனைத்தொடர்ந்து மிசோரமில் மட்டும் வாக்கு எண்ணிக்கையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.  இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான கருத்து; ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Opinion against Prime Minister Modi; Election Commission notice to Rahul Gandhi

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  கலந்து கொண்டு பேசிய போது, ”பிரதமர் மோடி டி.வியில் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் குறித்து பேசுவார். ஆனால், சில நேரங்களில் திடீரென்று கிரிக்கெட் போட்டி பார்ப்பதற்காக அவர் சென்றுவிடுவார். நமது கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கொண்டிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசத்தின் முன்னோடி அவர்களை தோற்கடித்து விட்டார்” என்று மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

 

அதே போல், நேற்று (22-11-23) நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ”பிக்பாக்கெட் அடிப்பவர்கள் தனியாக வருவதில்லை. அப்படி அவர்கள் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது. அதனால், அவர்கள் மூன்று பேர் கொண்ட குழுவாகத்தான் வருவார்கள். ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலும் இருந்து கொண்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிப்பர். 

 

அது மாதிரி, மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான் பிரதமர் மோடியின் வேலை. அவர் தொலைக்காட்சி முன் தோன்றி இந்து - இஸ்லாமியர்கள் பிரச்சனை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவார். இதற்கிடையே, அதானி பின்னால் வந்து உங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார். இருவருக்கும் இடையே யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்தான் அமித்ஷா. அப்படி யாராவது வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார்” என்று பேசினார். ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அவருக்கு பா.ஜ.க தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீதும், ராகுல் காந்தி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்