/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul betti.jpg)
டெல்லியில் சிபிஐ இயக்குனருக்கு கட்டாய விடுமுறை தந்ததை எதிர்த்து இன்று கண்டன பேரணி ராகுல் காந்தி தலைமையில் நடந்தது. சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி வந்த பேரணியை போலிஸார் தண்ணீர் பீய்ச்சி தடுத்தனர். அதை மீறியும் போராட்டம் நடைபெற்றதால் அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர். பேரணியை நடத்திய ராகுல் காந்தியையும் கைது செய்து, போலிஸ் வேனில் ஏற்றினர்.
பின்னர், அருகிலுள்ள லோதி காலணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் காவல் நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து பேட்டியளித்துள்ள ராகுல் காந்தி,” மோடி எங்கு வேண்டுமானாலும் ஓடி மறைந்துகொள்ளலாம், ஆனால் இறுதியில் உண்மையே வெளிவரும். சிபிஐ இயக்குனரை வெளியேற்றுவது மட்டும் உதவாது. சிபிஐ இயக்குனர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கை, அவரின் பயத்தை வெளிப்படுத்துகிறது” என்று போலிஸ் காவல் நிலையத்தை விட்டு சென்றபோது கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)