கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி

Rahul Gandhi riding a college student's bike

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கல்லூரி மாணவி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ராகுல் காந்தி பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுனகார்கே, கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி ஆகியோர் ஒருநாள் பயணமாக இன்று (செப்டம்பர் 23) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றனர். ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் புதிய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

அதே சமயம் ஜெய்ப்பூர் மகாராணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சாதனை புரிந்த மாணவிகளுக்கு இருசக்கர வாகனங்களை ராகுல் காந்தி வழங்கினார். அதன் பின்னர் மாணவி ஒருவரின் இரு சக்கர வாகனத்திலும் ராகுல் காந்தி பின்னால் அமர்ந்து பயணித்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

congress Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe