Advertisment

"மன்னிப்பு கேட்க முடியாது"... ஒட்டுமொத்த பாஜகவின் கூச்சலுக்கு நடுவே பதிலளித்த ராகுல் காந்தி...

ராகுல் காந்தி கூறிய "ரேப் இன் இந்தியா" விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜகவின் தொடர் வலியுறுத்தலுக்குராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

Advertisment

rahul gandhi response to bjp in loksabha

ஜார்க்கண்ட் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி, என்று எங்கு சென்றாலும் 'மேக் இன் இந்தியா' குறித்து பேசி வரும் நிலையில், தொடர் பாலியல் வன்முறைகள் அரங்கேறி, 'ரேப் இன் இந்தியா'வாக தற்போது நம் நாடு உள்ளதாக விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதுகுறித்துபேசிய ராகுல் காந்தி, "இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது" என தெரிவித்தார்.

make in India Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe