காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மறுக்கும் ராகுல்காந்தி

Rahul Gandhi refuses to accept the post of Congress President!

கட்சித் தலைவர் தேர்தலுக்கான நடைமுறையை காங்கிரஸ் விரைவில் தொடங்க உள்ள நிலையில், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராகும் சூழல் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியைத் தேர்வு செய்ய அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், அவரோ பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழப்பத்தில் உள்ள நிர்வாகிகள் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே, முகுல் வாஸ்னிக் ஆகியோரது பெயர்கள் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

congress Leader
இதையும் படியுங்கள்
Subscribe