ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு வெளியீடு...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்டவை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

rahul gandhi property details

அதன்படி ராகுல் காந்தியிடம் மொத்தம் 15.88 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், அதிலும் அசையும் சொத்து மதிப்பு ரூ.5.80 கோடி எனவும், அசையா சொத்து மதிப்பு ரூ.10.08 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் அவரிடம் உள்ள 333.3 கிராம் தங்கமும் அடங்கும். மேலும் ராகுல் காந்தியிடம் ரொக்கமாக ரூ.40 ஆயிரம் பணமும், வங்கிகளில் ரூ.17.93 லட்சம் வைப்புத்தொகையும் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போல பத்திரங்கள் மற்றும் பங்குகளாக ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி ராகுல் தனது பெயரில் 72 லட்சம் கடன் உள்ளதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் அந்த வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

loksabha election2019 Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe